முதன்முறையாக புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடும்பத்தினரால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது !
விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நேற்று டென்மார்க்கில் அவரது குடும்பத்தார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் மற்றும் பெருந்திரளான மக்கள் இணைந்து இவ்வாறு தமது உணர்வுபூர்வ அஞ்சலிகளை நேற்று செலுத்தியிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் யுத்தம் மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை விடுதலைப் புலிகளின் தலைவருக்கோ அவரது குடும்பத்தினருக்கோ எவ்வித அஞ்சலிகளும், நினைவேந்தல்களும் நடத்தப்பட்டதில்லை.
எனினும் சில தினங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவரின் சகோதரர் மனோகரன் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தனது சகோதரனின் மகள் என்று போலியான ஒருவரைக் கொண்டுவந்து நிதி திரட்டும் மோசடிகளில் பலர் ஈடுபட்டு வருவதனால் தாங்கள் இப்படியான பொது அஞ்சலி நிகழ்வொன்றை நடத்துவதாகத் தெரிவித்திருந்தார்
அதன் அடிப்படையில் இந்த வருடமே முதன் முறையாக விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது
பிரபாகரனின் சகோதரன் மனோகரனின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு டென்மார்க்கில் உள்ள DGI HUSET VEJLE மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.