பல்கலைக்கழகத்தைச் சுற்றி வந்த பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம்

டாக்டர் பட்டம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு உழைக்க வேண்டும். மணித்தியாலக் கணக்கில் படித்து, அதிகளவான பணம் செலவழித்த பின்னரே பட்டமும் அங்கீகாரமும் கையில் கிடைக்கிறது.

ஆனால், ஒரு பூனைக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம். அமெரிக்காவில் வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 4 வருடங்களாக மேக்ஸ் என்ற பூனை வசித்து வந்துள்ளது.

இந்தப் பூனை மாணவர்களுடன் மிகவும் நட்புடன் பழகுவதோடு பல்கலைக்கழக வளாகத்தின் குப்பை தொட்டிகளையும் பொறுப்புடன் பராமரித்து வந்துள்ளது.

இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது குறித்த பல்கலைக்கழகம்.

Recommended For You

About the Author: admin