வாகனங்கள் உள்ளே வர விரும்பாத ஆலய நிர்வாகம்..பழி தொல்பொருள் திணைக்களத்தில்.
முனீஸ்வர ஆலயத்தின் அனுமதியுடன் எல்லைக் கல் நாட்டப்பட்டது.. தொல்லியல் திணைக்கள அதிகாரி தெரிவிப்பு.
முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் கோட்டை பகுதியைச் சூழ தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை நடுகல் இட்டு அடையாளப்படுத்தப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயப் பகுதியும் தொல்லியல் திணைக்களத்தின் எல்லைக்குள் வருவதால் நடுகல்லை நாட்டும்போது ஆலயத்துடன் கலந்துரையாடி சம்மதத்தை பெற்றே திட்டத்தை மேற்கொண்டோம்.
தமது ஆலய வளாகத்துக்குள் வெளியிடங்களில் இருந்து வருகை தரும் வாகனங்கள் அதிகம் வருவதால் மாமிச உணவுகள் ஆலய சூழலில் அவதானிக்கப்பட்டுள்ளதால் தமக்கு வாயில் கதவு ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன் வைத்தார்கள்.
அதன் அடிப்படையில் குறைத்த பகுதியில் 7 கதவுகள் போடப்பட உள்ள நிலையில் அதில் ஒரு கதவை முனீஸ்வரர் ஆலயத்திற்கு போடுவதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

