சாட்டி இந்து மயானத்தில் நவீன தகனசாலை அமைக்க நடவடிக்கை..!
மின்சாரம் அல்லது எரிவாயு தகன மேடை ஒன்றை வேலணை சாட்டி இந்து மயானத்தில் அமைக்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு இன்று (26) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இவ்விடையம் குறித்து முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்த அனுசியா ஜெயகாந்த் மேலும் கூறுகையில் –
எமது மக்களின் இறுதி பயணத்தின் இறுதி இடமாக இருபது மயானங்கள் தான்.
அதனால் மயானங்களின் மேம்பாடும் காலத்துக்கேற்ற வகையில் மாறுபடல் அல்லது புதியதையும் உள்வாங்கல் அவசியமாகின்றது.
இதேநேரம் பாரம்பரிய மயானங்களில் விறகு தகன மேடைகள் இருப்பதால் அதிகளவு மரங்கள் அழிக்கப்படு இன்று பூவரச மரங்கள் கூட அற்றுவரும் நிலை காணப்படுகின்றது.
அதேவேளை இந்த எரிவாயு தகன மேடை வெப்பநிலை மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால், தகனம் சீரானதாகவும், முழுமையாகவும், திறன்மிக்கதாகவும் நடைபெறுகிறது. விரைவாகவும்
விறகுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால், மரங்கள் வெட்டப்படுவது குறைக்கப்படுகிறது, அதுவும் மரங்கள் பாதுகாப்புகுக்கு உந்துதலாக இருக்கின்றது.
இது வனப்பாதுகாப்புக்கு உதவுகிறது.
அதுமட்டுமல்லாது இவை விறகு எரிப்பதில் ஏற்படும் அதிகப்படியான புகை, கார்பன் மோனாக்சைடு (CO), மற்றும் திடமான துகள்கள் போன்றவற்றையும் குறைக்கின்றது.இதனால் காற்றின் தரமும் மேம்படுகின்றது.
முழுமையான தகனம் மூலம் சுகாதாரம் சார் நோய்க்கிருமிகள் பரவும் அபாயத்தையும் குறைக்கப்படுகிறது.
எனவே சபையூடாகவோ அல்லது விசேட நிதியூடாகவோ இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இன்னிலையில் சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வத்த நிலையில் பூவரச மரங்கள் அழிவடைவத தடுக்க வேண்டும் என்றும், அதை அருகிவிடாது பூவரச மரங்களை நாட்டி அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியதுடன் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுவதுடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத அனுமதி வழங்கியிருந்தது.
இன்னிலையில் தவிசாளர் அதை நிதி மூலங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

