VAT வரி தொடர்பில் மீள் பரிசீலனை

2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள்... Read more »

மஸ்கெலியாவில் புதிய சதொச விற்பனை நிலையம்

புதிய சதொச விற்பனை நிலையமொன்று மஸ்கெலியா நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (08) காலை மஸ்கெலிய பிரதான வீதியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயகவினால் சதொச விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக குறித்த பிரதேசத்தில் சதொச விற்பனை நிலையமொன்று இல்லாதிருந்தமை... Read more »
Ad Widget

பொதுமக்களிடம் தகவல் கோரும் பொலிஸார்

கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த... Read more »

துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரை, இன்று (07) அதிகாலை பொலிஸார் கைது செய்தனர். துருக்கி செல்வதற்காக வந்த குறித்த நபரின் பயணப் பொதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்நபரை விமான நிலைய பொலிஸார் கைது செய்தனர்.... Read more »

டிஜிட்டல் பொருளாதாரம்: இலங்கை பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதுமைப்பெண் 2.0 ஆரம்பம்

இலங்கையிலுள்ள முழு பெண் சமூகத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் வலுவூட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தேசிய பொருளாதாரத்தில் முன்னணி பங்கேற்பாளர்களாக மாற்றும் நோக்கில் சுஹுருலிய அல்லது புதுமைப்பெண் 2.0 உத்தியின் அறிமுகம் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இல்லத்தரசி... Read more »

தங்கம் கலந்த மண் ஏற்றுமதி குறித்து தீவிர விசாரணை!

நாட்டில் இருந்து தங்கம் கலந்த மண் கொள்கலன்கள் சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் தங்கத்தைப் பெறுவதைத் தவிர, வேறு ஏதும் நோக்கங்கள் உள்ளனவா என தீவிர ஆய்வுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

ராஜபக்சக்களை பாதுகாக்க மாட்டேன்: ரணில் பதிலடி

“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாவீரர் தின நிகழ்வு தொடர்பிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து ராஜபக்ச தரப்புக்கு எதிராக உயர் நீதிமன்றம்... Read more »

ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால் அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஐக்கிய மக்கள்... Read more »

யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர். இதேவேளை மேஷம்... Read more »

பங்களாதேஷிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம்

தற்போது பங்களாதேஷில் காணப்படும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் பின்னர் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றன. அதன்படி... Read more »