புலிக் கூண்டில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ‘ஷைர் பாக்’ (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்த உடலின் கால்கள் உட்பட உடலின் கீழ் பகுதியின் இறைச்சியை புலிகள் உட்கொண்டுள்ளதாக... Read more »

முன்பள்ளி மாணவர்களிடையே இனிப்பு நுகர்வு அதிகரிப்பு

நாட்டில் முன்பள்ளி பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்கள் மற்றும் இனிப்பு உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலுள்ள முன்பள்ளி மாணவர்களை மையப்படுத்தி மேற்கொண்ட கணக்கெடுப்பிலேயே இது தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்பள்ளி... Read more »
Ad Widget

கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே மாணவன் மரணம்; சிசிடிவி HARD DISK மாயம்

அம்பாறை – சாய்ந்தமருது மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த 13 வயது மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம, நேற்று (07) அறிக்கையிட்டுள்ளார். இந்நிலையில், மத்ரஸா சிசிடிவி கமெராவின் வன்பொருள் (HARD DISK)... Read more »

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மின்சார... Read more »

நேரலையில் நடு விரலை காண்பித்த பிபிசி தொகுப்பாளினி

பிபிசி செய்தி தொகுப்பாளின் ஒருவர் புதன்கிழமையன்று நேரலையில் நடுவிரலை காண்பித்த சம்பவம் பதிவாகியுள்ளது. எனினும் இது தொடர்பில் அவர் பின்னர் மன்னிப்பு கோரியிருந்தார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி எனும் குறித்த பெண், நேரலையின் போது ​​அவர் தனது நடுவிரலை காட்டியுள்ளார்.... Read more »

”இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம்

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தனர். அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்”... Read more »

பிறப்பு எண்ணிக்கையில் சரிவு

நாட்டில் பிறப்பு எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவு அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு காணப்படுவதாக... Read more »

6 மாதங்களில் லன்ச் ஷீட் பாவனைக்கு தடை

சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் கண்காணிப்புக் குழு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு லன்ச் ஷீட் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தலைமையில்... Read more »

இரட்டை குழந்தைகளை ஏற்க மறுத்த தாய் – மூவருக்கும் பிணை

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்க முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் வெலிசர நீதவான் நீதிமன்றில் இன்று (08) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது. மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா... Read more »

களனி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்பீடம், வணிகப்பீடம், முகாமைத்துவப்பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் என்பவற்றின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் குறித்த கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக களனி பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்... Read more »