மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, வரலாற்றில் முதல் தடவையாக செட்டியார் வீதியில் 24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், 22 கரட் தங்கத்தின் விலையும் 200,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி நிலவரப்படி, செட்டியார் வீதியில் 24 காரட் தங்கத்தின் விலை வரலாற்றில் அதிகூடிய விலையாக 220,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் விலை 200,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சில நாடுகள் தங்கத்தை மட்டுமே முதலீடாக கொள்வனவு செய்வதாகவும், யுத்தத்தின் மத்தியில் கூட பல நாடுகள் இவ்வாறு தங்கத்தை கொள்வனவு செய்வதால், தங்கத்தின் விலை ஒரே நேரத்தில் உயர்ந்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, கடந்த வார நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,790 டொலர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.