இந்தியாவுக்கு பொருளாதாரத் தடை : மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்

ரசிய இராணுவத்துக்கு உதவும் வகையில், தொழில்நுட்ப வளங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் எந்த விதியும் மீறப்படவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,

“அமெரிக்கா இந்திய நிறுவனங்கள் சிலவற்றின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இந்தியா,வெளிநாடுகளுடனான வர்த்த உறவில் சரியான விதிமுறைகளைப் பின்பற்றவதோடு எந்த விதியையும் மீறவில்லை.

இந்திய நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்து சரியான விளக்கமளிக்க அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கியது.

உக்ரெய்ன் மீதான ரசியாவின் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக ரசியாவுக்கு பொருளாதாரரத் தடை விதித்ததோடு, எந்தவொரு நாடும் ரசியாவுக்கு இராணுவ உதவிகள் வழங்கக் கூடாது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரசியாவுக்கு உதவும் விதமாக சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள ஏற்றுமதி செய்ததாக 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் இரண்டு இந்தியர்களின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் டிஎஸ்எம்டி நிறுவன இயக்குநர் ராகுல் குமார் சிங் தெரிவிக்கையில்,

“ஏன் எங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது என்று புரியவில்லை. நாங்கள் ஆட்டோமொபைல் பாகங்கள், மின்னணு பாகங்கள் போன்றவற்றையே ரஷ்யாவுக்கு விநியோகம் செய்கிறோமோ தவிர, எந்த விதியையும் மீறவில்லை. வழக்கம் போல் எங்கள் வர்த்தகம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin