ஜனாதிபதி இன்று சுவிஸ் பயணம்

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் செல்லவுள்ளார். உலக பொருளாதார மாநாட்டின் போது உலக தலைவர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை ஜனாதிபதி சந்திக்க உள்ளார். இலங்கை எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த வருடம்... Read more »

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 36 குழந்தைகள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடுங்குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. கடுங்குளிர்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன்கள் 13.01.2024

மேஷம் பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும். கடன்கள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ரிஷபம் மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி... Read more »

சனத் ஜயசூரிய போட்டிகளில் மோசடியில் ஈடுபட்டார்: ஐசிசி தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிரிக்கெட் போட்டிகளில் மோசடி செய்ததாக சில குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் கூறியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில்... Read more »

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல் : 19 பேர் படுகாயம், 60 பேர் தப்பியோட்டம்

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். மேலும், 60க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய... Read more »

நிதி இல்லை கிளிநொச்சி நாய்கள் சரணாலயம் மூடப்படுகின்றது

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து வருடங்களாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

வாழைத்தோட்டத்தில் அரங்கேறிய படுகொலை : புதிய தகவல்

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதன‍ை தெரிவித்துள்ளார்.... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேலும் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. “தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக... Read more »

தலைவரானால் தமிழர்களின் உரிமைக்காக பாடுபடுவேன்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும் அதேவேளை, கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சித் தலைவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது எனவும்... Read more »

2016 இல் காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்: சிதைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு

வங்காள விரிகுடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32 விமானத்தின் சிதைந்த பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன போது அதில் 29 பணியாளர்கள் இருந்ததாக இந்திய ஊடகங்கள்... Read more »