மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் நேரா நேரத்திற்கு முடித்துவிட்டு நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். மன நிறைவான இந்த நாளில் குடும்ப உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். பொங்கல் கொண்டாடுவதற்கு தயாராகி விடுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பணப்பிரச்சினைகள் சீராகும். வருமானம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தடைகள் விலகும். வியாபாரத்தை விரிவுபடுத்த உண்டான அத்தனை முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொறுப்பு உங்களுக்கு கூடுதலாக இருக்கும். நீங்கள் மட்டும் முன்னேறுவது இல்லாமல் உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்ற பாதையில் வழி நடத்திச் செல்வீர்கள். புண்ணியத்தை சேர்ப்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடிய காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். நீண்ட தூர பயணங்களும் வெற்றியை தரும். உற்சாகத்தில் குறைவிருக்காது. வியாபாரத்திலும் தொழிலிலும் எதிர்பார்க்காத நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற மன கவலைகள் இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. ஆதங்கத்தை வெளியில் கொட்ட முடியாது. கோபத்தை வெளி காட்டாமலும் இருக்க முடியாது. இப்படி சில பல சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். இறைவழிபாடு செய்யுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லேசான மனகவலை இருக்கும். சண்டை சச்சரவுகள் வரும். தேவையற்ற மன பயம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். செய்யும் வேலையில் மட்டும் அக்கறை இருந்தால் போதும். தேவையற்ற நண்பர்கள் உறவுகளிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். புது மனிதர்களுடன் அதிகமாக பழக வேண்டாம். –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தானாக உங்களை விட்டு விலகும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இருந்து வந்த டென்ஷன் குறையும். உறவுகளோடு நல்லிணக்கம் ஏற்படும். கணவன் மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளால் மன நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்கக்கூடிய நாளாக இருக்கும். நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு நல்ல காரியம் இன்று நடக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பவர்களுடைய ஆசை நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் டென்ஷன் இருக்காது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வீர்கள். வியாபாரத்தில் பார்ட்னரோடோ அல்லது மற்றவர்களோடு போட்டி போட மாட்டீர்கள். எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து இன்று நிம்மதி அடைவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்க வேண்டாம். நிதி நிலைமையில் இன்று கூடுதல் கவனம் தேவை. டிஸ்கவுன்ட் சேலில் யாராவது பொங்கலுக்கு துணி தருகிறார்கள் என்றால் கூட அதை போய் வாங்காதீங்க. கவனமாக இருங்கள். நீங்கள் வாங்குவது மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் அந்த இடத்தை காட்டிக் கொடுக்காதீங்க, பிறகு அடுத்தவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை உங்களுக்கு வந்துவிடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த டென்ஷன் குறையும். நல்ல பெயர் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடைய பாராட்டை சுலபமாக பெற்றுவிடுவீர்கள். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு ஒரு நல்ல பலன் இன்று கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளால் மன நிறைவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று, உடன் இருப்பவர்களே பிரச்சனையாக இருப்பார்கள். சொந்த பந்தங்கள், மேனேஜர், டீச்சர், இப்படி உங்கள் மேல் அதிகாரிகளால் சின்ன சின்ன டார்ச்சர்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். என்ன செய்வது முன்கோபத்தை வெளிப்படுத்தக் கூடாது. அடங்கி சென்று தான் ஆக வேண்டும். வாயை திறக்கக் கூடாது. பொறுமையை நிதானத்தை மட்டும் நீங்களே உங்களுக்கு சொந்தமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வேறு வழி இல்லை இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நல்லது நடக்கும்.