2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதன்படி, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி மாதம் 18 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.
பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் சமீபத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.