விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. Read more »

இலங்கையில் கருத்து வெளிப்பாடு சுதந்திரம் கிரிமினல் குற்றம்

சமூக வலையத்தங்கள் மற்றும் செய்தி மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்பு நகல் சட்டம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நகல் சட்டத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து... Read more »
Ad Widget

எண்ணெய் விலை சரிந்தது

சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது. மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம்... Read more »

மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்: பூனம் பாண்டே

பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, “நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம்... Read more »

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில்... Read more »

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்புப் பேரவை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷ்சங்க... Read more »

பெலியத்த கொலை; வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர்

பெலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஒப்பந்த கொலையாளியாக செயற்பட்ட முன்னாள் கடற்படை வீரரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் நில்லேவெல,முத்தரகம பிரதேசத்தில் நேற்று... Read more »

வீட்டின் மீது விழுந்த விமானம்: விமானி உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடமாடும் வீடு ஒன்றின் மீது சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்ததாக கிளியர்வாட்டர் தீயணைப்பு படையின்... Read more »

ஐரோப்பிய நாடுகளில் குடியேற போலி திருமணங்கள்: 15 பேர் சைப்ரஸில் கைது

போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் சைப்ரசில் கைது செய்துள்ளனர். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் ஆட்கடத்தலிலும்... Read more »

மத்திய கிழக்கில் அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

அமெரிக்க படையினர் நேற்று ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்தானில் அமைந்துள்ள... Read more »