எண்ணெய் விலை சரிந்தது

சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது.

மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம் அல்லது $1.37 டொலர்களாக குறைந்து 77.33 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய்ஒரு பீப்பாய்க்கு 2 சதவீதம் அல்லது $1.54 டொலர்களாக குறைந்து 72.28 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

கத்தார் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் எட்டப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதன் பின்னணியில் எண்ணெய் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் வளர்ச்சியும் எண்ணெய் விலை குறைப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஒக்டோர் மாதத்தின் பின்னர் மிகப்பெரிய அளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி கண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Recommended For You

About the Author: admin