பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை: பிரதான சந்தேக நபர் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனமல்வில, ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில, கஸ்யப புர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு... Read more »

மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் மரணம்

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார். விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இம்மாணவன் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த... Read more »
Ad Widget

துரத்தப்பட்டமை சதி அல்ல – கோட்டா வடிகட்டின முட்டாள் என்கிறார் விக்கி

“போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார். துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள... Read more »

இந்தியாவில் அமுலானது குடியுரிமை திருத்தச்சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில் இத்திருந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெளியான... Read more »

அமேதியில் ராகுல், ரே பரேலியில் பிரியங்கா போட்டி

உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரே பரேலி தொகுதியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று அந்த மாநில காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த தோ்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டாா். இதில் வயநாட்டில் வெற்றி பெற்ற... Read more »

ஜெர்மன் இரயில் செலுத்துனர்களின் பணிநேர சர்ச்சை: போராட்டத்திற்கு அழைப்பு

ஜெர்மனியின் இரயில் செலுத்துனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஒன்று பாரியளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வேலை நேரம் மற்றும் ஊதியம் தொடர்பில் நீண்டகாலமாக காணப்படும் முரண்பாடு காரணமாக இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மன் நேரப்படி அதிகாலை 2 மணி முதல்... Read more »

மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு வருகை தந்த சர்வதேச விமானம்

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு தனியாருக்கு சொந்தமான “T7SKE Falcon 900EX” ரக விமானமொன்று வருகை தந்து வரலாறறுப் பதிவொன்றை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் பயணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு முதற்தடவையாக சர்வதேச விமானமொன்று வருகை தந்துள்ளது. Read more »

தலைமறைவான குற்றவாளி: மதம் மாறிய நிலையில் கைது

மட்டக்களப்பில் இரண்டு சிறுவர்களைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திருப்பெருந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நபர் நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளின் தாய் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.... Read more »

இந்தியாவுடன் ரூபாய் வர்த்தகத்தை ஆரம்பிக்க விரும்பும் இலங்க‍ை

இலங்கை, பங்களாதேஷ், வளைகுடா பிராந்திய நாடுகள் உட்பட பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இந்தியாவுடன் ரூபாயில் (INR) வர்த்தகத்தை தொடங்க ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வணிகங்களுக்கான பரிவர்த்தனை செலவைக் குறைக்க உதவும் என்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்... Read more »

தென்னிலங்கையில் அடுத்தடுத்து பயங்கர துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

தென்னிலங்கையில் இன்று இரவு இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர். எல்பிட்டி, பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டர்... Read more »