தென்னிலங்கையில் அடுத்தடுத்து பயங்கர துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

தென்னிலங்கையில் இன்று இரவு இருவேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

எல்பிட்டி, பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

ர56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியதுடன், பெண் ஒருவர் உட்பட படுகாயம் அடைந்த மூவர் கல்லிந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், குற்றவாளிகளை கைதுசெய்ய துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்துக்கு அண்மித்த பிரதேசங்களில் பொலிஸார் தீவிர சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அம்பலாங்கொட கலபொட பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இருவர் காயம் அடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin