ஜெர்மன் இரயில் செலுத்துனர்களின் பணிநேர சர்ச்சை: போராட்டத்திற்கு அழைப்பு

ஜெர்மனியின் இரயில் செலுத்துனர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஒன்று பாரியளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

வேலை நேரம் மற்றும் ஊதியம் தொடர்பில் நீண்டகாலமாக காணப்படும் முரண்பாடு காரணமாக இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மன் நேரப்படி அதிகாலை 2 மணி முதல் 24 மணிநேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்காக இந்த பிரச்சினை நீடித்து வரும் நிலையில், இரயில் சாரதிகளினால் கடந்த வாரமும் ஒன்றைரை நாள் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி, சம்பள குறைப்பு இன்றி வேலை நேரத்தை வாரத்திற்கு 38 இல் இருந்து 35 மணித்தியாலமாக குறைக்க வேண்டும் என இரயில் செலுத்துனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்படி, தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் புதிய சலுகைகளை எதிர்பார்த்த நிலையில், குறித்த சலுகைகள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பதிலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது பொருத்தமற்றது என ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin