மது போதையில் பாடசாலை அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட மாணவன்

வவுனியாவை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது மதுபோதையில் வந்த உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் ஒன்று... Read more »

இலங்கைக்கு கடனை மீள செலுத்த அவகாசம் வழங்கிய நாடு

இலங்கை வாங்கிய கடனை மிள் செலுத்துவதற்கு பங்களாதேஷ் அரசாங்கம் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இலங்கையின் கோரிக்கைக்கு பதிலளித்த போதே பங்களாதேஷ் அரசாங்கம் இந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவற்கே... Read more »
Ad Widget

குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நுவரெலியாவில் துகளுடன் கூடிய பனி பொழிவு!

லிட்டில் லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகாலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு காலநிலை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் நுவரெலியாவை பார்க்கும் போதும் அவ்வாறான உணர்வு ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள்... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலக்கு வைக்கப்படும் தமிழ் மக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணைந்து போட்டியிடுவதானது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக இருக்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட பேராசிரியர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சாரம் துண்டிப்பு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) நவம்பர் மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியமைக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் கட்டணம் 5.5 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின்... Read more »

விமான பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

உலகின் பல நாடுகளில் தற்போது கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சில நாடுகள் சுகாதார பாதுகாப்பினை பலப்படுத்தி வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது. விமான பயணிகளுக்கான அறிவுறுத்தல்... Read more »

முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள்... Read more »

பௌத்த பிக்கு ஒருவரின் மோசமான செயல்!

ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே சுதம்ம தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ரன்முத்துகல சிறுவர் இல்லத்தில் 14 மற்றும் 17 வயதுடைய... Read more »

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதி தவணை முறையில் வழங்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை தவணை முறையில் மட்டுமே வழங்க முடியும் என திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க... Read more »