வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் பயணம் செய்துள்ளனர்.
ஹோன் மே ருட் தீவில் இருந்து அன் தோய் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் 400 மீட்டர் தொலைவில் கடல் சீற்றம் காரணமாகப் படகு கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 21 பேர் உயிர் பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ ஹோ சி மின் நகரம் மற்றும் ஹனோயில் அவசர கால உதவி மையங்களை நிறுவியுள்ளது.
தற்போது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களைத் தூதரகம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
·

