கண்ணீரை வரவழைத்த நெகிழ்ச்சியான தருணம்: தனது முதல் FIFA World Cup கோலை மறைந்த தாய்க்கு அர்ப்பணித்த ஜோவாவ் நெவ்ஸ்!
போர்ச்சுக்கல் அணியின் இளம் நட்சத்திரம் ஜோவாவ் நெவ்ஸ் (João Neves), தனது கால்பந்து வாழ்க்கையின் முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்த பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மறைந்த தனது தாயார் ரோசாவிற்கு (Rosa) அதனை உருக்கமாக அர்ப்பணித்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு அவர் பேசிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது:
🗣️ “மைதானத்தின் கேலரியில் என் அப்பாவையும், என் காதலியையும் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால், நீங்கள் அறிந்தபடி என் அம்மாவை மட்டும் என்னால் அங்கு பார்க்க முடியவில்லை… ஆனாலும் அவரின் ஆசி எப்போதும் என்னோடுதான் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். என்னுடைய இந்த முதல் FIFA World Cup கோல் என் அம்மாவுக்கானது!
விளையாட்டுத் துறையில் எத்தனையோ சாதனைகள் படைக்கப்பட்டாலும், தாயின் நினைவோடு மைதானத்தில் ஒரு மகன் படைத்த இந்த சாதனை உலகக் கால்பந்து ரசிகர்களின் இதயங்களை உருக வைத்துள்ளது.

