அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் அமெரிக்கா – ஈரான் சமாதான ஒப்பந்தம் சாத்தியம்! – பாகிஸ்தான் பிரதமர் தகவல்!
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையொன்று அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கட்டத்தை எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் விசேட அறிவிப்பொன்றை விடுத்துத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்பாட்டை எட்டியதைத் தொடர்ந்து, அதற்குரிய சமாதான உடன்படிக்கையில் உடனடியாக மின்னணு தொழில்நுட்பம் (E-signing) ஊடாக இரு நாடுகளும் கையெழுத்திட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதன் பின்னர், அதற்குரிய தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் (Technical-level talks) அடுத்த வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

