“ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் குண்டுமழை!” – ஈரானில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

“ஒருபுறம் பேச்சுவார்த்தை.. மறுபுறம் குண்டுமழை!”
– ஈரானில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏவுகணைத் தளங்கள் தும்சம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தென் ஈரானில் உள்ள ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா திடீரென புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி உலகையே அதிரவைத்துள்ளது!

பண்டார் அப்பாஸ் கடற்படைத் தளம் காலி!

ஹார்முஸ் ஜலசந்தியின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஈரானின் மிக முக்கிய தென்முனைத் துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய அதிவேகப் படகுகளை அமெரிக்கப் படைகள் குறிவைத்து அழித்துள்ளன!

“தற்காப்புத் தாக்குதல் மட்டுமே!” – அமெரிக்கா விளக்கம்

அமெரிக்க மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

“எங்கள் படைகளுக்கு ஈரானியப் படைகளால் ஏற்பட்ட அச்சுறுத்தலில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தற்போதைய தற்காலிகப் போர் நிறுத்தத்தின் விதிகளை மதிக்க பழகியுள்ள அதே வேளையில், எங்கள் படைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்!” என செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை!

இந்த அதிரடித் தாக்குதலுக்கு மத்தியிலும், அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் முறியவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் உத்தியோகப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“செவ்வாய்க்கிழமையான இன்று (May 26), ஈரானின் முதன்மை பேச்சுவார்த்தையாளர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும், கத்தார் பிரதமருக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆரம்ப ஆவணத்தில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகள் குறித்து விவாதிக்க இன்னும் சில நாட்கள் ஆகும்” என்று கூறினார்.

Recommended For You

About the Author: admin