“ரோமில் இறங்கியதும் பிரதமர் மெலோனியைச் சந்தித்தேன்” – மோடி!
👉 பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலியின் தலைநகர் ரோமில் இறங்கியதும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் இரவு உணவருந்தி, பின்னர் உலகப் புகழ்பெற்ற கொலோசியத்திற்கும் விஜயம் செய்ததாக சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
👉 இரு நாட்டுத் தலைவர்களும் பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
👉 இந்தியா – இத்தாலி நட்பை வலுப்படுத்துவது மற்றும் இருநாட்டு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இன்றைய பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து கலந்துரையாட இரு தலைவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.


