வானிலை முன்னறிவிப்பு: வார இறுதியில் வாட்டியெடுக்க இருக்கும் வெப்பம்!
இந்த வாரத் தொடக்கத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து, பெந்தெகொஸ்தே வார இறுதியில் பிரகாசமான சூரியன் மீண்டும் தலைகாட்டவுள்ளது. பிரான்ஸ் முழுவதும் கோடைகாலத்தை நினைவூட்டும் வகையிலான வெப்பம் (Températures estivales) நிலவும் என ‘மெத்தியோ -பிரான்ஸ்’ (Météo-France) அறிவித்துள்ளது.
மே 23, சனிக்கிழமை (Samedi 23 mai)
வார இறுதியின் தொடக்கமே மிகவும் சிறப்பானதாக அமையவுள்ளது. காலையில் லேசான மேகமூட்டம் காணப்பட்டாலும், பகல் செல்லச் செல்ல அது விலகி பிரான்ஸ் முழுவதும் பிரகாசமான வெயில் அடிக்கும்.
வெப்பநிலை: காலையில் 17 முதல் 24 °C வரையும், பிற்பகலில் 19 முதல் 31 °C வரையும் பதிவாகும்.
அதிகபட்சம்: Nantes) மற்றும் Bordeaux ஆகிய நகரங்களில் அதிகபட்சமாக 31 °C பதிவாகும்.
குறைந்தபட்சம்: பிரெஸ்ட் (Brest) நகரில் பதிவாகும்.
மே 24, ஞாயிற்றுக்கிழமை (Dimanche 24 mai)
பிரான்ஸ் முழுவதும் தொடர்ந்து வெயில் சுட்டெரிக்கும். சராசரி வெப்பநிலை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சம்: Bordeaux மற்றும் Toulouse பகுதிகளில் அதிகபட்சமாக 30 °C பதிவாகும்.
மழை வாய்ப்பு: ஆல்ப்ஸ் (Alpes) மலைப்பகுதிகளில் (குறிப்பாக Gap மற்றும் Bourg-Saint-Maurice) இடியுடன் கூடிய மழை (Orages) பெய்யக்கூடும். மேலும், Aurillac பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 25, திங்கட்கிழமை – பெந்தெகொஸ்தே (Lundi 25 mai)
திங்கட்கிழமை விடுமுறை நாளிலும், ஆல்ப்ஸ் மலைப்பகுதியைத் தவிர (அங்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும்) நாடு முழுவதும் கடுமையான வெயில் (Soleil de plomb) ஏறிக்கும் . Nantes , Toulouse, Bordeaux, Limoges மற்றும் Montélimar ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 30 °C பதிவாகும்.
முக்கிய நகரங்களில் பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை நிலவரம்:
25 °C : லில்லி (Lille), மார்செய்ல் (Marseille), அஜாசியோ (Ajaccio)
26 °C : ஸ்ட்ராஸ்பேர்க் (Strasbourg), நைஸ் (Nice), அலன்கான் (Alençon)
27 °C : பாரிஸ் (Paris), பிரெஸ்ட், டூர்ஸ் (Tours), ராம்ஸ் (Reims)
28 °C : ரூவன் (Rouen), ரென்ஸ் (Rennes), ஆக்செர் (Auxerre)
29 °C : La Rochelle, Lyon), Biarritz, Montpellier),Perpignan, Bourges
20 °C (குறைந்தபட்சம்) : Cherbourg
(குறிப்பு: இந்த வானிலை முன்னறிவிப்புகளுக்கான ‘மெட்டோ-பிரான்ஸ்’ நிறுவனத்தின் நம்பகத்தன்மைக் குறியீடு (Indice de confiance) 3/5 முதல் 4/5 என்ற அளவில் உள்ளது).

