P .S .G – ஆர்சனல் இறுதிப்போட்டி: பாரிஸ் நகரில் திறந்தவெளி ‘இரசிகர் வலயம்’ அமைக்கும் திட்டம் ரத்து!

P .S .G – ஆர்சனல் இறுதிப்போட்டி: பாரிஸ் நகரில் திறந்தவெளி ‘இரசிகர் வலயம்’ அமைக்கும் திட்டம் ரத்து!

எதிர்வரும் மே 30-ஆம் திகதி தி புடாபெஸ்ட் நகரில் நடைபெறவுள்ள ‘சாம்பியன்ஸ் லீக்’ கால்பந்து இறுதிப்போட்டியில் ‘பி.எஸ்.ஜி’ மற்றும் ஆர்சனல் அணிகள் மோதவுள்ளன. இதற்காகப் பாரிஸ் நகரில் மாபெரும் திறந்தவெளி ‘ரசிகர் வலயம்’ அமைக்கப்பட மாட்டாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாரிஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு, ரசிகர்களுக்காக ஒரு மாபெரும் கொண்டாட்ட இடத்தை உருவாக்கப் பாரிஸ் நகரமுதல்வர் (மேயர்) இம்மானுவேல் கிரிகுவார் முதலில் பெரும் ஆதரவு தெரிவித்தார். ஆனால், காவல்துறை மற்றும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் ஆகியோரின் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கைகளைக் கேட்டறிந்த பிறகு, பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானது எனக் கருதி அவர் தனது முடிவைக் கைவிட்டுள்ளார்.

 

மே 30-ஆம் திகதியன்று பாரிஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மாபெரும் நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன:

 

பிரான்ஸ் தேசிய மைதானத்தில் அயா நகமுராவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி.(Un concert de Aya Nakamura au Stade de France)

 

‘லா டிஃபான்ஸ் அரென ‘ அரங்கில் டாம்சோவின் இசை நிகழ்ச்சி.(Un show de Damso à Paris La Défense Arena

 

‘அக்கோர் அரென ‘ அரங்கில் ராப் பாடகர் பௌஸின் நிகழ்ச்சி.(Un concert du rappeur Bouss à Accor Arena,

 

புகழ்பெற்ற ‘ரோலண்ட்-காரோஸ்’ டென்னிஸ் தொடர்.(Le tournoi de Roland-Garros, organisé à proximité du Parc des Princes)

 

‘Jean-Bouin’ மைதானத்தில் ‘Stade Français’ அணியின் உள்ளூர் விளையாட்டுப் போட்டி.

 

இத்தனை நிகழ்வுகளுக்கு மத்தியில் காவல் துறையினரைப் பிரித்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது மிகவும் கடினம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2025-ஆம் ஆண்டில் பாரிஸ் அணி ‘சாம்பியன்ஸ் லீக்’ கோப்பையை வென்றபோதும், சமீபத்தில் மே 6-ஆம் தேதி ‘பேயர்ன் முனிச்’ அணியை வீழ்த்தியபோதும் பாரிஸ் வீதிகளில் பெரும் வன்முறைகள் வெடித்தன. ‘சாம்ப்ஸ்-எலிசே ‘ மற்றும் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினருடனான மோதல்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் ஆகியவை மீண்டும் அரங்கேறுவதைத் தடுக்கவே காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

திறந்தவெளி ரசிகர் வலயம் ரத்து செய்யப்பட்டாலும், பாரிஸ் அணியின் சொந்த மைதானமான ‘பார்க் டே பிரின்ஸ்’ அரங்கில் மாபெரும் திரைகளில் இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. முந்தைய இறுதிப்போட்டியின் போது செய்யப்பட்டதைப் போலவே இதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு குறித்த விவரங்களை P.S.G அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

Recommended For You

About the Author: admin