வளைகுடா போர் நிறுத்த முன்மொழிவு: ஈரானின் பதில் இன்னும் பரிசீலனையில்!
வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஈரான் எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பாக மிக முக்கியமான தகவல்கள் இன்று (2026 மார்ச் 25) வெளியாகியுள்ளன.
அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சமாதானத் திட்டத்தை ஈரான் முழுமையாக நிராகரிக்கவில்லை என்பதை ஈரானிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பகட்டத்தில் ஈரானிடமிருந்து வந்த எதிர்வினை ஓரளவு எதிர்மறையாக இருந்தபோதிலும், அந்த முன்மொழிவை அவர்கள் இன்னும் ஆழமாகப் பரிசீலித்து வருகின்றனர்.
“நாங்கள் கதவுகளை முழுமையாக அடைக்கவில்லை” என்று தெரிவித்த அந்த அதிகாரி, சில நிபந்தனைகள் மற்றும் மாற்றங்களுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் இராணுவப் பின்வாங்கல் போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
வளைகுடா பிராந்தியத்தில் போர் நிறுத்தம் குறித்த ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட்டாலும் கூட, அது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஈரான் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், அது கடந்த சில தசாப்தங்களாக நிலவி வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்க உதவும்.
ஈரானை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வர அமெரிக்கா மேலதிக இராஜதந்திர அழுத்தங்களை அல்லது சலுகைகளை வழங்கக்கூடுமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
இதேவேளை ஈரானின் சிரேஷ்ட அரசியல்-பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று (25) அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், ஈரானின் சொந்த நிபந்தனைகள் மற்றும் கால அட்டவணையின்படியே போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
போர் முடிவுக்கு வரும் நேரத்தைத் தீர்மானிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் இடமளிக்காது எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் ,
எதிரியின் ‘ஆக்கிரமிப்புகள் மற்றும் கொலைகளை’ முற்றாக நிறுத்துதல், ஈரானுக்கு எதிராக மீண்டும் போருக்கு வரமாட்டோம் என்பதற்கான உறுதிமொழி,
போர்ச் சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பாகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட உத்தரவாதம், பிராந்தியம் முழுவதும் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துப் எதிர்த்தரப்புக் குழுக்களும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் போரை நிறுத்துதல்,
ஈரானின் இயற்கையான மற்றும் சட்டபூர்வமான உரிமையான ஹோர்முஸ் நீரிணையை, தொடர்ந்தும் ஈரானின் இறையாண்மையின் கீழேயே இயங்கச் செய்தல்ஆகிய 5 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது .

