1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு.

1 லிட்டர கூட எடுத்துட்டு போக முடியாது! அமெரிக்காவுக்கு சவால் விட்ட ஈரான்! போச்சு.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில் உலகளாவிய எரிசக்தி சந்தையை அதிரவைக்கும் வகையில் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) வழித்தடம் வழியாக ஒரு லிட்டர் எண்ணெய்யைக் கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஈரான் அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ளது உலக பொருளாதாரத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்துள்ள ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் பெரிய பகுதி இந்த வழித்தடம் வழியாகவே கடத்தப்படுகிறது.

 

இதனால் இந்த பாதையில் ஏற்படும் எந்த தடையும் உலக சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.தற்போது அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

 

ஈரான் அமெரிக்கா

 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து 120 அமெரிக்க டாலர் வரை நெருங்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகளாவிய பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதற்றம் அதிகரிக்க காரணமாக, சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் சில முக்கிய இராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகளை தாக்கியதாக தான் காரணம். அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.

 

ஹோர்முஸ் நீரிணை

 

இந்த சூழலில் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு ராணூவம் ( Islamic Revolutionary Guard Corps (IRGC) வெளியிட்டுள்ள கடும் எச்சரிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து அந்த நாடுகளுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் ஒரு லிட்டர் எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் ஈரான் முன்பு எச்சரித்திருந்தது.

 

டொனால்ட் டிரம்ப்

 

இதற்கு பதிலளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த வழித்தடத்தில் ஈரான் தடை ஏற்படுத்தினால் அதற்கு 20 மடங்கு கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு சூழல் மிகவும் பதற்றமான நிலையில் உள்ளது. ஈரானின் பதிலடி நடவடிக்கையாக அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களும் தாக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

மத்திய கிழக்கு

 

குறிப்பாக சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்களும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

 

ஹோர்முஸ் நீரிணை

 

உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள் இந்த கடல் வழித்தடம் வழியாக நடைபெறுவதால், அங்கு ஏற்பட்டுள்ள தடைகள் உலக சந்தையில் உடனடி அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இதன் தாக்கமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், உலக பொருளாதாரத்திலும் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin