சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற பேருந்து எரிப்பில் ஈழத்தமிழ் பெண்ணும் படுகாயம்
சுவிற்சர்லாந்தின் Fribourg மாநிலத்தில் உள்ள Kerzers நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (10 மார்ச் 2026) மாலை இடம்பெற்ற PostBus Switzerland தபால் பேருந்து தீவிபத்து திட்டமிட்ட செயல் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காயமடைந்தவர்கள்:
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு மீட்புப் பணியாளரும் அடங்குகிறார்.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மூவரில் ஒருவர், அதே பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மகிந்ததன் மலர்விழி என்ற ஈழத் தமிழர் என அறியப்படுகிறது.

