டிட்வா புயலின் பின் பேராதனையில் சீரமைப்புப் பணிகளுக்காகத் தொடருந்து சேவை ஆரம்பம்!

டிட்வா புயலின் பாதிப்புக்கு பிறகு முதன்முறையாக, பேராதனை சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து பிலிமத்தலாவ வரை தொடருந்து ஒன்று இயக்கப்பட்டுள்ளது.

கண்டி தொடருந்து நிலையத்திலிருந்து சாலை வழியாக கொண்டுவரப்பட்ட ஓர் இயந்திரம் மற்றும் இரண்டு பெட்டிகளைக் கொண்ட தொடருந்தே இவ்வாறு இயக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் சேதமடைந்த தொடருந்து தண்டவாளங்களைச் சீரமைக்கத் தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த தொடருந்து பயன்படுத்தப்பட உள்ளது

Recommended For You

About the Author: admin