பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம்

பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம்

குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை ஏற்படுத்தி விட்டு கணவன் தப்பி சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் ஆசிாியா் ஆவாா்.

ஆசிரியரான குறித்த பெண் , மேலதிக வருவாயை பெறும் நோக்குடன் வீட்டின் முன்பாக சிறிய வியாபர நிலையம் ஒன்றினையும் நடத்தி வந்துள்ளார்.

அவா் தனது வியாபார நிலையத்தில் இருந்தபோது, மதுபோதையில் வந்த கணவன் மதுபானப் போத்தலால் அவரது தலையில் தாக்கியுள்ளார்.

போத்தல் உடைந்த நிலையில், அதன் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் ஆசிரியரின் வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தந்தை தனது தாயைக் கொடூரமாகத் தாக்குவதைக் கண்டு, அதனைத் தடுக்க அந்த ஆசிரியையின் சிறு வயது மகன் போராடியுள்ளார். இந்த உருக்கமான மற்றும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளன.

படுகாயமடைந்த ஆசிரியை தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாகியுள்ள கணவனைக் கைது செய்ய காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin