பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை

அமரகீர்த்தி அத்துகோரள – அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (பெப்ரவரி 11, 2026) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022 மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் அரகலய போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைகளின் போது, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் காவல்துறை உத்தியோகத்தா் ஜெயந்த குணவர்தன ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டனர்.

கம்பஹா நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற (Gampaha High Court Trial-at-Bar). நீதிபதிகளான சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ரசந்த கொடவெலஇந்த தீா்ப்பினை வழங்கியுள்ளனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 41 பிரதிவாதிகளில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதிவாதிகள் சாட்சிகள் போதியதாக இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். ஏனெனில், இதில் முதன்முறையாக CCTV காட்சிகள், முக அடையாளத் தொழில்நுட்பம் (Facial Recognition), DNA பரிசோதனைகள் மற்றும் விஞ்ஞான ரீதியான சான்றுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதுடன், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்புக் கடமையிலிருந்த காவல்துறை உத்தியோகத்தரும் அருகிலிருந்த கட்டடம் ஒன்றினுள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பு இலங்கையில் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ஒரு பலமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 180 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்தத் தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin