யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நேற்று கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப்பேருரை நிகழ்வில் ‘யோகா உளவியலும் – மானுடர் வாழ்வும்’ என்ற தலைப்பில் முன்னாள் கலைப்பீடாதிபதியும், மெய்யியல் துறையின் முன்னாள் தலைவருமான வாழ்நாள் பேராசிரியர் என். ஞானக்குமரன் நினைவுப் பேருரையாற்றினார்.