சைவப்புலவர் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அகில இலங்கை சைவப் புலவர் சங்கத்தினால் நடத்தப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்பாக சைவப்புலவர் சி.கா.கமலநாதன் தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இல 610 காங்கேசன்துறை வீதி  இணுவில் என்னும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் பாடவிதானத்தினை kumarandrama@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0779773538 வாட்சப் இலக்கம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் பரீட்சைகள் 2023 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் வாரம் நடைபெறும் என சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor