கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி

கஸ்ஸப தேரோவின் மனு தள்ளுபடி: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (பெப்ரவரி 3, 2026, செவ்வாய்க்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை செல்லுபடியற்றதாக்கக் கோரி தேரர்கள் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

மனுக்களைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெனாண்டோ ஆகியோர், அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பின் மூலம், திருகோணமலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய விளக்கமறியல் உத்தரவு தொடர்ந்தும் செல்லுபடியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது திருகோணமலைப் பகுதியில் நிலவும் மத மற்றும் காணி விவகாரங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin