ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (பெப்ரவரி 02, திங்கட்கிழமை) இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

 

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கல்களில் பல கோடி ரூபாய் நிதி மோசடி மற்றும் கையூட்டு பெறப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

 

தற்போது சந்தேகநபர் வெளிநாட்டில் (அமெரிக்காவில்) வசிப்பதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், அவரை சர்வதேச காவற்துறையினரின் (Interpol) உதவியுடன் கைது செய்ய ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) விடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin