சாகும் வரை உண்ணாவிரதம் – இறுதி நபரும் வைத்தியசாலையில்..!

சாகும் வரை உண்ணாவிரதம் – இறுதி நபரும் வைத்தியசாலையில்..!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7-வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு நாளைய தினத்திற்கு (02) முன்னர் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்காத காரணத்தினால், நாளை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரியே, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin