தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு: திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்குக் கௌரவம்!

தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு: திரை மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்குக் கௌரவம்!

தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதுகள், கலைத்துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொடர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சிறந்த நடிகர்களாக வெவ்வேறு ஆண்டுகளுக்காக மாதவன் (விக்ரம் வேதா), விஜய் சேதுபதி (96), சூர்யா (சூரரைப் போற்று), சிலம்பரசன் TR (மாநாடு) மற்றும் ஆர்யா (சார்பட்டா பரம்பரை) போன்றோர் விருதுகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறந்த நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் முன்னணி வகிக்கின்றனர்.

சிறந்த திரைப்படங்களாக ‘பரியேறும் பெருமாள்’, ‘ஜெய் பீம்’, ‘கடைசி விவசாயி’ போன்ற சமூகத் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் தொிவுசெய்யப்பட்டுளளன.

அதேபோன்று சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடா்கள் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

சின்னத்திரையைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன:

சிறந்த தொடர்களாக ‘வாணி ராணி’, ‘தெய்வமகள்’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’, ‘எதிர்நீச்சல்’ போன்ற தொடர்கள் வெவ்வேறு ஆண்டுகளுக்காக விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த நடிகர்களாக கிருஷ்ணா, சஞ்சீவ், ஆல்யா மானசா, ராதிகா சரத்குமார் போன்றோருக்கு வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த நடிகர்/நடிகை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுப் பட்டியலில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம், மூன்றாம் பரிசு ₹75 ஆயிரம், சிறப்புப் பரிசு ₹75 ஆயிரம். பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்புப் பரிசு ₹1.25 லட்சம். நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.

அதேபோன்றுசின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம். ஆண்டின் சிறந்த சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளருக்கு தலா ₹1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

Recommended For You

About the Author: admin