ஈரான் விவகாரம்: அமெரிக்க தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்காது!

ஈரான் விவகாரம்: அமெரிக்க தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்காது!

மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் எந்தவொரு இராணுவத் தாக்குதலிலும் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என பிரித்தானியா (UK) அதிரடியாக அறிவித்துள்ளது.

📍 அமெரிக்காவின் தாக்குதலில் இணையப் போவதில்லை என அறிவித்தாலும், பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரித்தானியா உறுதிபூண்டுள்ளது.

 

கட்டாரின் (Qatar) தலைநகர் தோஹாவின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த வாரம் பிரித்தானியாவின் அதிநவீன டைபூன் போர் விமானங்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை ஈரான் பதில் தாக்குதல் நடத்தினாலோ அல்லது மோதலை தீவிரப்படுத்தினாலோ, நட்பு நாடுகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

 

சர்வதேச சட்டங்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, முதல் கட்டத் தாக்குதலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதே பிரித்தானியாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாக இருப்பதாக ‘தி கார்டியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

🌐 மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் இந்த நிலைப்பாடு சர்வதேச அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. கட்டாரில் உள்ள அல்-உடீட் (Al-Udeid) விமான தளம் பிராந்தியத்தின் மிகப்பெரிய இராணுவ மையமாக உள்ள நிலையில், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பிரித்தானியாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

Recommended For You

About the Author: admin