தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..!

தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..!

தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று புதன்கிழமை(28.01.2026) பிற்பகல் தென்மராட்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

 

பிரதேசசெயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ,சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ்,பிரதேசசபைத் தவிசாளர் குகதாசன் ,நகர,பிரதேச சபைகளின் உபதவிசாளர்கள்,உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன்போது சுகாதாரம்,போக்குவரத்து,விவசாயம்,கல்வி,உள்ளூராட்சி,வீடமைப்பு உள்ளிட்ட விடயதானங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது

Recommended For You

About the Author: admin