வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம் செய்த இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்..!

வடமராட்சி கிழக்கு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பாக கள விஜயம் செய்த இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்..!

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் அண்மைக்காலமாக பல போக்குவரத்து பிரச்சனைகள் இடம்பெற்றதுடன் இவ் பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு பட்ட முறைப்பாடுகள் வடமராட்சி கிழக்கு பொது அமைப்புக்களால் உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஆனாலும் இப் பிரச்சனைகள் தொடர்பாக எந்த வித தீர்வும் கிடைக்காத நிலையில் இந்த மாதம் ஆரம்பத்தில் இடம் பெற்ற வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டத்தில் இவ் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாட பட்டது

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு உரிய நேரத்திற்கு வருகை தருவது இல்லை மற்றும் மருதங்கேணி வைத்தியசாலை அருகாமையில் அதிக நேரம் காத்திருந்து பயணிகளை ஏற்றிச் செல்லல் மற்றும் கேவில் வரை பேரூந்துகள் செல்வதில்லை இலகுவாக பழுதடையும் பேரூந்துகளை வடமராட்சி கிழக்கில் பணிக்கு அமர்த்துதல் என பல்வேறு பட்ட முறைப்பாடுகள் ஊடகங்களில் வருவதை தொடர்ந்து

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீபன் அவர்களிடம் உடனடி கோரிக்கையை மக்கள் வைத்த போது அவரின் உடனடி உத்தரவுக்கு இணங்க இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள் இன்றைய தினம் கள விஜயம் செய்தனர்

இவ் கள விஜயத்தில் ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள்…..

வடமராட்சி கிழக்கு பகுதிக்கு பேரூந்துகள் பற்றாக்குறையாக காணப்படுவதால் மருதங்கேணி வைத்தியசாலை பகுதியில் மக்கள் கோரிக்கைக்கு இணங்கவே இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் அதிக நேரம் நிற்பதாகவும் அச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வரும் கருத்துக்கள் போலியானது எனவும் அதிகாரிகளால் சுட்டி காட்டப் பட்டதுடன் பேரூந்துகள் போதியளவு பணிக்கு அமர்த்தும் வரை அவ் இடத்தில் காத்திருந்து மக்களை ஏற்றி செல்வது அவசியமாக காணப்படுவதால் அவ்வாறே செல்லும் என கூறியுள்ளார்

மற்றும் கேவில் வரை பேரூந்து செல்வது தொடர்பாக ஆய்வின் முடிவில் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் இரவு நேரங்களில் தங்கிசெல்வது தொடர்பாக பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மற்றும் பேரூந்து நிறுத்தி வைப்பதில் பிரச்சினை காணப்படுவதால் கடந்த காலத்தில் சில அசோகரிய சம்பவம் நடந்ததாகவும் அதற்கு இனிமேல் அவ்வாறு நடைபெறாது மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாக கேவில் கிராம அபிவிருத்தி சங்கம் வசதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளது என கூறியுள்ளனர்

மற்றும் இனிமேல் வடமராட்சி கிழக்கு மக்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளால் சிரம பட தேவை இல்லை என்றும் அவ்வாறு எதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அறிய தந்தால் நாம் அதற்கான தீர்வுகளை பெற்று தருவதாக கூறினார்கள்

இவ் கள விஜயத்தில் வடமாகாண சிகரம் கல்வி நிறுவனத்தின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களின் வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் உதய பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டார்.

நிருபர்
பூ. லின்ரன்

Recommended For You

About the Author: admin