நீரில் மூழ்கிய வௌிநாட்டு பெண் பலி..!
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ரஷ்யாவை சேர்ந்த 49 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பெந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

