யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வு..!

யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வு..!

பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு ஒன்று 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

 

ஜெசாக் மற்றும் ஏ.டி.ரி(ADT) நிறுவனங்களின் கூட்டிணைவோடு ஐஎன்ஓ(Ino) மற்றும் யுஎன்எவ்பிஏ(unfpa) நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்பில் இடம்பெற்ற மேற்படி இருநாள் செயலமர்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ச.சிவஸ்ரீ கலந்து சிறப்பித்திருந்தார்.

 

மேலும் ஜெசாக் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி என்.சுகிர்தராஜ், ஏ.டி.ரி நிறுவன செயற்பாட்டாளர் பேபன் மிச்செல், ஏடிரி நிறுவன ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ஜீவனி காரியவசம்,வளவாளர் பாலமுரளி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

இதன்போது யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin