சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது

யாழில் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி பழிவாங்கிய கந்தர்மடத்தைச் சேர்ந்த முன்னாள் காதலி கைது

யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் முறைப்பாட்டாளருடன் சுமார் 15 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

தனது காதலனை பிரிந்ததால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வேதனையடைந்ததாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin