இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்..!
இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.12) காலை
9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்து,
வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்களுக்கான கொடுப்பனவு தேவைப்படுபவர்களுக்கான எண்ணிக்கை தொடர்பாகவும் பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்,
மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.

