காரைதீவில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது..!
காரைதீவின் தமிழரசுக்கிளையின் தலைவரும், முன்னாள் தவிசாளருமான கி.ஜெயசிறில் அவர்களின் செயல் திட்டத்திற்கு அமைய தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர்களின் திருநாளாம் தைப்பொங்கல் வருடப்பிறப்பினை முன்னிட்டு தாயக உறவுகளும் கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜேர்மன் நாட்டில் வசிக்கும் சங்கர் என்பவர் நல் எண்ணம் கொண்டு அனைவரும் தைப்பொங்கலுக்கு புத்தாடை அணிய வேண்டும் என மேற்கொண்டு புலம்பயர் தேசத்தில் வசிக்கும் சங்கர் அவர்களும் அன்னாரின் பிள்ளைகளும் இணைந்து தைப்பொங்கலை கொண்டாடும் சகோதர உறவுகள் மற்றும் வயோதிபர்களிற்கு வேட்டி,சாறன், சாறிகள் என்பனவற்றை முன்னாள் தவிசாளரும் சமூக சேவகருமாகிய கி.ஜெயசிறில் ஊடாக வழங்கி வைத்தார்.
இவை மட்டும் இன்றி வெள்ள நிவாரணங்கள் உட்பட பல உதவி திட்டங்களையும் இவர்களுக்காக தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். பல உதவி திட்டங்களை தானாகவே முன்வந்து செயற்பட கூடிய நல்உள்ளம் கொண்டவர்.தாமும் தம் உறவுகளும் வாழ வேண்டும் என்று வாழ்பவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணமாக செயற்பட்டு அனைவரையும் தன் உறவாக எண்ணி வாழ்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தவிசாளர் கி்.ஜெயசிறில் தெரிவிக்கையில் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் எம்மக்களை மறவாது செயல்படும் இவரது பரம்பரையினர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் எனவும் பிரார்த்தித்தார்


