அடிப்படை சம்பள உயர்வை வர்த்தமானியில் வௌியிட வேண்டும்..!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள 1,750 ரூபாய் அடிப்படை சம்பளத்தை, அரசாங்கம் வர்த்தமானியில் வௌியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (8) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உறுதியளித்தது.
எனவேதான் அதற்கு தாம் ஆதரவாக வாக்களித்திருந்ததாக தெரிவித்தார்.
அதேநேரம் அவ்வாறு வழங்கப்படும் சம்பளத்தை உடனடியாக வர்த்தமானியில் அறிவிப்பதன் ஊடாக பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரிக்கும்.
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து விட வேண்டாம் எனவும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

