இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவிலான தங்கம் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கிலோகிராம் தங்கத்தை, இந்திய அதிகாரிகள் தமிழக கடற்கரைக்கு அருகில் வைத்து பறிமுதல் செய்தனர்.
தென்னிந்தியாவின் கடல் வழித்தடங்களில் இயங்கும் தங்கக் கடத்தல் வலையமைப்புகளை முறியடிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின்போதே, இந்த தங்க கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகில் தங்கத்தின் விலை வரலாறு காணாதளவு உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் தங்கத்தில் விலையானது மூன்றரை லட்சத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

