சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!

சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..!

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இது குறித்துத் தெரிவிக்கையில்:

இந்த வேலைத்திட்டமானது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

இணைய வழியிலான குற்றங்களைக் கண்டறியவும், பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin