2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று (31) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.29 ரூபாவாகவும், விற்பனை விலை 313.83 ரூபாவாகவும் காணப்பட்டது.
2024 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாவாகவும், விற்பனை விலை 297.01 ரூபாவாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

