அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்: தங்கை வெளியிட்ட தகவல்

அமெரிக்காவில் இந்திய இளம்பெண் நிகிதா (Nikitha Rao Godishala, 27) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை சம்பவத்திற்கு முன்னர் நிகிதா அர்ஜூன் ஷர்மாவிடம் 4,500 டொலர் கடன் கொடுத்திருந்தார். அதில் 3,500 டொலர் மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டு, மீதம் 1,000 டொலர் கேட்ட போது, நிகிதா மேலும் கடன் கொடுக்க மறுத்து கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

டிசம்பர் 31ஆம் திகதி, பணத்தை வாங்குவதற்காக அர்ஜூனிடம் நிகிதா சென்றதாக நிகிதாவின் தங்கை சரஸ்வதி தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நிகிதா கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க பொலிஸார் கருதுகின்றனர்.

நிகிதாவின் உடல், அர்ஜூன் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்டறியப்பட்டது. உடலில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன. இதன்பிறகு, அர்ஜூன் தலைமறைவாகியதால், பொலிஸார் அவர் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகித்து, கைது வாரண்ட் பிறப்பித்துள்ளனர்.

இதேவேழள, நிகிதாவின் தந்தை ஆனந்த் Godishala, அர்ஜூன் நிகிதாவின் முன்னாள் காதலர் அல்ல என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அர்ஜூனும் ஏனைய இரண்டு நபர்களும், நிகிதா தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தனர். ஆனால் அர்ஜூன் நிகிதாவின் அறையில் தங்கியிருந்தவர் மட்டுமே.

நிகிதாவின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகளும் உதவ வேண்டும் என ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin