காத்தான்குடி நகர சபையின் 2026ம் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!!

காத்தான்குடி நகர சபையின் 2026ம் புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!!

காத்தான்குடி நகர சபையின் 2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் இன்று (01.01.2026) காத்தான்குடி நகரசபை முன்றலில் நடைபெற்றது.

புதிய ஆண்டினை வரவேற்று தமது அரச கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக காலை 9.00 மணிக்கு நகர முதல்வரால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுடன்

முப்படைகள் உட்பட நாட்டிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சேவை உறுதியுரையும் இடம் பெற்றது.

 

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகரசபையின் கௌரவ உறுப்பினர்கள் நகரசபையின் செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin